என் உடல் நலம் குறித்து விசாரித்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
நான் மருத்துவமனையில் இருக்கும்போது, எனது நலன் விசாரித்து, நான் சீக்கிரம் குணமடைய வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த செப்டம்பர் 30ம் தேதி அவர், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சனை காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிகிச்சை பெற்றிருந்த நிலையில், அன்றைய தினம் இரவு 10.30 மணியளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ரஜினிக்கு ரத்த நாளத்தில் அடைப்பு கண்டறியப்பட்ட நிலையில், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படுள்ளது. தொடர்ந்து ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை, மருத்துவர்கள் சாய் சதீஷ், விஜய் சந்திரன், பாலாஜி ஆகியோர் அடங்கிய குழுவினர் கண்காணித்து வந்தனர். இதனிடையே சிக்சை முடிந்து ஐசியுவில் இருந்த ரஜினிகாந்த் கண்விழித்து பேசியதாகவும், தனக்கு சிகிச்சியளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ரஜினிகாந்த், ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டு இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.