"பாலியல் புகார் குறித்து ஊடகங்களில் பேசாதீர்"- நடிகை ரோகிணி
பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம் என நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர்கள் கருணாஸ் மற்றும் பூச்சி முருகன், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக திரைத்துறை சம்பந்தப்பட்ட பாலியல் புகாரை விசாரிக்க நடிகை ரோகிணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோகிணி, “திரைத்துறையில் பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம். பாலியல் புகார் குறித்து நடிகர் சங்கத்திடம்தான் முதலில் புகார் அளிக்க வேண்டும் அல்லது பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை விசாகா கமிட்டியிடம் தெரிவியுங்கள். குற்றம் உறுதி செய்யப்படும் நடிகருக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படும். ஏற்கனவே வந்த பல புகார்கள் குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். கமிட்டியிடம் புகார் அளிக்காமல் ஊடகங்களில் பேசுவது ஏற்புடையதல்ல. ஏற்கனவே வந்த பல புகார்கள் குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கும் முன்பு ஊடகத்தில் பேசுவதால் எந்த பயனும் இல்லை. பாலியல் ரீதியான துன்புறுத்தல், அச்சுறுத்தல் இருந்தால் உறுப்பினர்கள் அடிபணியாதீர்கள்” என்றார்.