×

ஒரு கண்ணில் துணிச்சல்...மறு கண்ணில் கருணை - நடிகர் சூர்யா இரங்கல்

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். 

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் கேப்டன் இன்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார்.அவருக்கு வயது 71. விஜயகாந்தின் உடல் தற்போது தேமுதிக தலைமை கழகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி மரியாதை நாளை மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமை கழகமான கோயம்பேட்டில் நடைபெறவுள்ளது. அவரது மறைவுக்கு தலைவர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சூர்யா வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு கண்ணில் துணிச்சலும் மறு கண்ணில் கருணையுமாய் வாழ்ந்த அபூர்வ கலைஞர் அவர். கடைக்கோடி மக்கள் வரை எல்லாருக்கும் எல்லா உதவியும் செஞ்சு புரட்சிக் கலைஞனாய், கேப்டனாய் நம் எல்லார் மனசுலயும் இடம்பிடிச்சவர். அண்ணன் விஜயகாந்தின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.