×

புதுச்சேரி சிறுமி படுகொலை, மிருகத்தனமான செயல் - நடிகர் விஜய் கடும் கண்டனம்!

 

சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் எக்ஸ் வலைதள பக்கத்தில், புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.