×

"நடிகர் சங்கத்திலிருந்து கெட்டவர்கள் வெளியேறிவிட்டனர்" - விஷால்

 

நடிகர் சங்கத்திற்குள் இருந்த கெட்டவர்கள் வெளியேறி விட்டதாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் நடிகர் விஷால் பேசினார்.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர்  தலைமையில்  பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர்கள் கருணாஸ் மற்றும் பூச்சி முருகன், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், “நடிகர் சங்கத்திற்குள் இருந்த கெட்டவர்கள் வெளியேறிவிட்டனர். நல்லவர்கள் உள்ளே வந்துள்ளனர். 2025 ஆம் ஆண்டு பொதுக்குழு நடிகர் சங்க புதிய கட்டடத்தில் நடைபெறும். தென்னிந்திய திரைத்துறையில் அச்சுறுத்தல், பாதிப்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் உள்ளது. இதுகுறித்து ஆண்கள் புகாரளிக்க முன்வர வேண்டும். அவ்வாறு புகாரளிக்கும் பட்சத்தில் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.