மோசடியாக விற்கப்பட்ட நிலம்- ராமநாதபுரத்தில் நடிகை கௌதமி புகார்
தன்னை ஏமாற்றிய இடத்தரகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் நடிகை கௌதமி நேரில் புகார் அளித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் வட்டம் தேரிருவேலி அருகே உள்ள ஸ்வத்தான் கிராமத்தில் அழகப்பன் என்பவர் நடிகை கௌதமிக்கு இடம் வாங்கி கொடுத்துள்ளார். அந்த இடத்தை செபி அமைப்பு விற்கவோ, வாங்கவோ கூடாது என முன்னதாகவே நீதிமன்றம் வாயிலாக தடையானை பெற்றிருந்த நிலையில் இடைத்தரகர் மற்றும் அந்த இடத்தின் உரிமையாளர் இருவரும் இதனை மறைத்து இடத்தை விற்றது நடிகை கௌதமிக்கு தெரிய வந்ததையடுத்து தன்னை ஏமாற்றிய நபர்கள், மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகை கௌதமி நேரில் புகார் அளிக்க வந்துள்ளார்.
நிலம் மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் மீது மேலும் ஒரு புகாரினை ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீஸாரிடம் நடிகை கௌதமி அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.