2 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு- தமிழ்நாடு அரசு உத்தரவு
Aug 27, 2024, 18:57 IST
நீர்வளத்துறை செயலாளர் மணிவாசனுக்கு, நிர்வாக சீர்த்திருத்தம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையர் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மணிவாசன் ஐஏஎஸ் தற்போது நீர்வளத்துறை செயலாளராகவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக அமுதா ஐஏஎஸ் பொறுப்பில் உள்ளனர். இந்நிலையில் நிர்வாக சீர்திருத்தம், ஊழல் கண்காணிப்பு ஆணையராக மணிவாசன் ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக அமுதா ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டதால், அவர் வகித்த பொறுப்புகள் மணிவாசன் மற்றும் அமுதாவுக்கு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.