×

அமுதா ஐ.ஏ.எஸ்.க்கு கூடுதல் பொறுப்பு! வெளியான அதிரடி உத்தரவு

 

உள்துறை செயலாளர் பதவியில் இருந்து சமீபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் செயலாளர் பொறுப்புக்கு இடமாறுதல் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமுதா, தற்போது முதல்வரின் முகவரி பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

                        
உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐ.ஏ.எஸ், அண்மையில் வருவாய் துறைக்கு மாற்றப்பட்டார். தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக உள்ள நிலையில், கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதல் பொறுப்பாக முதல்வரின் முகவரி திட்டம் மற்றும் மக்களுடன் முதல்வர் சிறப்பு அதிகாரி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரி பொறுப்பில் இருந்த மோகன் சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குநராக சில தினங்களுக்கு முன் மாற்றப்பட்டது குறிப்பிடதக்கது.