ஆதித்யா L1 விண்கலம் - கவுன்ட்டவுன் இன்று தொடக்கம்
Sep 1, 2023, 07:49 IST
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவில் தனது வெற்றிப்பயணத்தை தொடங்கிய கையோடு, சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’என்ற விண்கலத்தை ஏவவுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா விண்கலத்தை விண்ணில் ஏவ இருக்கிறது.
இந்த விண்கலம் திட்டமிட்டபடி இலக்கை அடைய 4 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. 100-120 நாட்கள் பயணித்து L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது. குறிப்பாக சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், குறித்து ஆய்வு செய்யவும் இது உதவும் என்று கூறப்படுகிறது.