சவுக்கு சங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதி
பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக கடந்த 4ம் தேதி தேனியில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து பெண் பத்திரிகையாளர் அளித்த புகாரையடுத்து சவுக்கு சங்கர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் புகார் கூறினர்.
இந்நிலையில் கோவை மத்திய சிறையில் அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக வந்த புகாரை அடுத்து சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. கோவை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே, அல்ட்ரா ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றதுசிகிச்சையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கரை அனுமதித்துள்ளனர். யூடியூபர் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாய் கமலா, அளித்த மனுவை 2 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு சிறைத்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.