மாமன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாளையொட்டி மரியாதை செலுத்தப்படும் - அதிமுக அறிவிப்பு
Jan 20, 2024, 21:30 IST
மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் 441-ஆவது பிறந்த நாளையொட்டி, மதுரையில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையை ஆண்ட மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் 441-ஆவது பிறந்த நாளான 25.1.2024 - வியாழக் கிழமை காலை 10 மணியளவில், மதுரை, கீழவாசல் திருமலை நாயக்கர் மகால் வளாகத்தில் அமைந்துள்ள மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்துப்படும்.