×

செந்தில் பாலாஜி அமைச்சராகலாம் என்பது தவறு- அதிமுக வழக்கறிஞர்

 

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று காலை நிபந்தனை ஜாமின் வழங்கியது. 

இதனைத் தொடர்ந்து வழக்கு நடைபெற்று வரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் 25 லட்ச ரூபாய்க்கான பிணைத்தொகை மற்றும் இருவர் உத்தரவாதம் சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் பினையாணை புழல் மத்திய சிறைக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து புழல் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், ஆளுயர மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பளித்தனர். இதனிடையே செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கபடலாம் என தகவல் கசிந்துள்ளது.