×

பாஜகவில் இருந்து அண்ணாமலை சஸ்பெண்ட்?- ஜெயக்குமார் சந்தேகம்

 

பாஜகவில் இருந்து அண்ணாமலையை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்போல் இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக வருகிற செப்டம்பர் மாதம் லண்டன் செல்கிறார். இதற்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர்.  லண்டன் செல்லும் அண்ணாமலை 6 மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது.  தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை ஆறு மாத காலம் லண்டனில் தங்கியிருந்தால் கட்சி பணிகள் தொய்வடையும் . எனவே தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பாஜக தலைமை இதுகுறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பாஜகவில் இருந்து அண்ணாமலையை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்போல் இருக்கிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்டது தெரியாமல் லண்டன் செல்கிறேன், அரசியல் படிக்கிறேன் என்கிறார். நாய் கூட பிஏ பட்டம் போட்டுக் கொள்கிறது என ஆர்.எஸ். பாரதி கூறுகிறார். நாய் வாலை நிமிர்த்த முடியாது. தமிழகத்திற்கு நீட் தேவையில்லை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. தமிழ்நாடு மட்டுமல்ல, அதிமுகவின் அடிப்படை கொள்கையே நீட் விலக்கு தான். இதுகுறித்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசிய கருத்தை வரவேற்கிறோம். அவருக்கு எங்கள் நன்றி” என்றார்.