×

அதிமுக நிர்வாகிகள் இடையே மோதல்... அண்ணன், தம்பிகளுக்குள்ள சின்ன சின்ன கருத்து வேறுபாடு- ஜெயக்குமார்

 

அதிமுக நிர்வாகிகள் இடையேயான மோதல் அண்ணன், தம்பிகளுக்குள்ள சின்ன சின்ன கருத்து வேறுபாடு இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தமிழக மின்சார வாரியமும், அதானிடம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் நிலையில் விசாரணை முடிவில் ஊழல் நடந்ததாக தெரியவரும். தமிழகத்தில் தனிப்பட்ட முறையில் நடைபெறும் கொலைக்கும், அரசுக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என ஆர்.எஸ்.பாரதி சொல்வதற்கு வெட்கம் இல்லையா? தமிழகத்தில் போலீஸ் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் சிக்கி உள்ளது. சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறும் திருமாவளவனுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது என தெரியவில்லை.அதிமுகவுக்கு தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டு உள்ளது. வருகின்ற 2026ல் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும். நான்கு பேர் மட்டுமே கொண்ட சுப்பிரமணிய சுவாமி கட்சி அல்ல, அதிமுக  என்பது மிகப்பெரிய கட்சியாக இருந்து வருகிறது. அதிமுக நிர்வாகிகளிடையே ஏற்பட்ட கைகலப்பு என்பது அண்ணன், தம்பிகள் இடையே ஏற்படும் சின்ன சின்ன கருத்து மாறுபாடு. அது வெளியே வந்தவுடன் சரியாகிவிடும்.  அதிமுக நிர்வாகி உடன் ஏற்பட்ட கைகலப்பு குறித்து ஆரோக்கியத்துடன் விவாதித்து உள்ளோம். அதிமுக நிர்வாகிகள் இடையே எந்தவித புகைச்சலும் இல்லை, அதிமுக கட்சி ஆரோக்கியத்துடன் இருந்து வருகிறது.


நாம் தமிழர் கட்சியினர் A யில் இருந்து B-க்கு போனால் என்ன  B-க்கு இருந்து A -க்கு போனால் என்ன? எங்களுக்கு அதை பற்ற் கவலை கிடையாது. அதிமுக கட்சியைச் சார்ந்தவர்கள் யாரும் மாற்றுக் கட்சிகளுக்கு செல்ல மாட்டார்கள். அதிமுக ஆட்சி கால கட்டத்தில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உட்பட 40 பேர் முறைகேடாக நியமனம் செய்தது தொடர்பாக ஆளுநர் விசாரணை கமிஷன் நியமித்திருப்பதற்கு எங்களுக்கு எந்தவித மாற்று கருத்தும் இல்லை. தவறு செய்தால் தண்டிக்கப்பட வேண்டும். வருகின்ற ஒரு வருடத்தில் அதிமுகவை நோக்கி அதிக அளவில் இளைஞர்கள் வர வாய்ப்பு உள்ளது” என்றார்.