“நீங்களா? நாங்களானு பார்த்திடலாம்..” திமுகவினருக்கு எதிராக விடாபிடியாக போராடி சாதித்த கே.பி.முனுசாமி
ஒசூர் அருகே மத்திய அரசு நிதியின் கீழ் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை துவக்கி வைக்க வந்த கே.பி.முனுசாமிக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 4 மணிநேர சாலை மறியலுக்கு பிறகு போலிசார் பாதுகாப்பில் கே.பி.முனுசாமி பூமி பூஜை செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி ராமன்தொட்டி என்னுமிடத்தில் மத்திய அரசின் PMGSY என்னும் திட்டத்தின் கீழ் பல்வேறு கிராம பகுதிகளுக்கு சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்திட அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி அடிக்கல் நாட்டுவதாக அதிமுகவினர் பேனர் வைத்த நிலையில், அமைச்சர் சக்கரபாணி இத்திட்டத்தை துவக்கி வைக்க இருப்பதாக கூறி திமுகவினர் முன்னதாகவே திமுக கொடிகளை நட்டு BDO வரவழைத்து காலையில் பூமி பூஜை செய்துவிட்டனர். திமுக ஆட்சி எனக்கூறி, கே.பி.முனுசாமிக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பாக மாறிய நிலையில் கே.பி.முனுசாமி பேரிகை - வேப்பனஹள்ளி ராமன்தொட்டி என்னுமிடத்தில் 4 மணிநேரம் சாலை மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து கிருஷ்ணகிரி கூடுதல் காவல் எஸ்பி சங்கர் தலைமையில் 60க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
கேபி முனுசாமி ஒழிக என திமுகவினரும், ஸ்டாலின் ஒழிக என அதிமுகவினரும் மாறி மாறி முழுக்கங்களை எழுப்பியதால் மோதல் போக்கு உருவாகி பதற்றமான சூழல் நிலவிய நிலையில், போலீசார் திமுகவினரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் கூடாத வகையில் கடைகளை அடைத்த போலீசார், பொதுமக்களை வெளியேற்றினர். 4 மணிநேர சாலை மறியல் சாலை மறியலில் கே.பி.முனுசாமியுடன், எம்எல்ஏக்கள் அசோக்குமார், தமிழ்செல்வன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கே.பி.முனுசாமி, தார்சாலை அமைத்திட பூமி பூஜை செய்தார்.