×

அண்ணாமலையின் படத்தை செருப்பால் அடித்து உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டம்

 

ராமநாதபுரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தரம் தாழ்ந்து விமர்சித்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து, அவரது உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி யார் குறித்து அவதூறாக பேசும் அண்ணாமலையின் உருவப்பட உருவ பொம்மை எரித்து இராமநாதபுரத்தில் அதிமுகவினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எந்த தியாகமும் சேவையும் செய்யாத அண்ணாமலை தமிழக அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்த நினைக்கிறார். அவர் ஆற்றிய பணிகள், தியாகம் என்ன..? ஏற்கெனவே அரவக்குறிச்சியில் தோற்றுப் போனார். அதனைத் தொடர்ந்து கோவையில் பல கோடிகளை வாரி இறைத்தும் மக்கள் அவரை நிராகரித்து விட்டனர். அதனை உணராமல் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார்.

இதைப் பற்றி எல்லாம் சிந்திக்காத அண்ணாமலை, பொதுச் செயலாளரை தொடர்ந்து பேசி வருவதை கண்டித்து, இராமநாதபுரத்தில் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஏ முனியசாமி அறிவுறுத்தலின் பேரில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் தலைமையில், அதிமுகவினர் அண்ணாமலையின் உருவப்படத்தை செருப்பால் அடித்து உருவ பொம்மை ஏறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் இராமநாதபுரம் நகர கழக செயலாளர் பால்பாண்டியன் மண்டல மாவட்ட தகவல் தொழில் பிரிவு செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் என ஏராளமானோர் பெருந்திரளாக கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.