×

"அதிமுக ஒன்றிணைய என்ன தியாகம் செய்வதற்கும் நான் தயார்"- ஓபிஎஸ்

 

அதிமுக ஒன்றிணைய என்ன தியாகம் செய்வதற்கும் நான் தயார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “ராமநாதபுரத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு நான் 33% வாக்குகளை பெற்றிருக்கிறேன். பிரிந்தவர்கள் இணையாமல் அதிமுக வெற்றி பெறாது என டிடிவி தினகரன் கூறுவது சரியே. தமிழகத்திற்கு உரிய நிதியை மத்திய அரசு நிச்சயம் வழங்கும். அதிமுகவிற்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளேன். எல்லாமே கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் செய்தேன்.  அதிமுக ஒன்றிணைய என்ன தியாகம் செய்வதற்கும் நான் தயார்” என்றார்.