"2026ல் தமிழ்நாட்டில் பாஜக கடலில் மூழ்கி விட்டது என்ற நிலை உருவாகும்" - பொன்னையன்
2026-இல் பிஜேபி தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை உருவாகும் - பொன்னேரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுகவின் உறுப்பினர்கள் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொன்னையன், 2026-இல் தமிழ்நாட்டில் பிஜேபி இல்லை என்ற நிலை உருவாகும் எனவும், கடலில் மூழ்கி விட்டது என்ற நிலை உருவாகும் என தெரிவித்தார். தமிழ் மக்களுக்கு துரோகி என தினகரனை ஜெயலலிதா, கடலில் தூக்கி வீசி விட்டார் எனவும், அவருக்கும் அதிமுகவுக்கும் சல்லி காசு கூட தொடர்பில்லை என்றும் தெரிவித்தார்.
ஓபிஎஸ் ஒரு பச்சை துரோகி, மற்ற கட்சி விவகாரத்தில் தலையிட்டு சூழ்ச்சி செய்யும் சூழ்ச்சிக்காரர் என அவரே அவரை பற்றி சொல்லிக்கொண்டார் எனக் கூறிய அவர், 2026ல் திராவிட இயக்கத்தின் தன்னிகரற்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி எனவும் தெரிவித்தார். மேலும் பிஜேபியுடன் கூட்டணி தொடர்பாக திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்த கருத்திற்கு அவரிடமே சென்று கேட்குமாறு கூறி பொன்னையன் சென்று விட்டார்.