×

தமிழ்நாட்டில் அதிமுக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை 

 

வாக்கு எண்ணிக்கை தொடங்கி 4 மணி நேரம் கடந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. 

நாடாளுமன்ற தேர்தல் 543 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தன.  பாஜக ஏற்கனவே ஒரு இடத்தில் போட்டியின்றி வெற்றி பெற்ற நிலையில் 542 இடங்களுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தேசிய அளவில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.  தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. 

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி 4 மணி நேரம் கடந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. தாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொண்ட பாஜகவும் எந்த தொகுதியிலும் முன்னிலையில் இல்லை. தர்மபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியும், விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனும் மட்டுமே எதிர்க்கட்சியைப் பொறுத்தவரை முன்னிலையில் உள்ளனர். குறிப்பாக அதிமுக நெல்லை, கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய 3 தொகுதிகளில் 4-வது இடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி, சில இடங்களில் நாம் தமிழர் கட்சியை கூட முந்த முடியாத சூழல் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.