×

ஒரே நாடு ஒரே தேர்தல்- அதிமுக ஆதரவு

 

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒன்றிய அரசின் மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதாவது அதிமுக அரசின் பதிவிக்காலம் முன்கூட்டியே முடியும் என்பதால் திட்டத்துக்கு ஆதரவு இல்லை என 2018-ல் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒன்றிய அரசின் மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் கால விரயம், செலவு தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓரே நாடு ஒரே தேர்தல் முடிவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது. மக்களவை மற்றும் மாநிலத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடப்பது, நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவுவதோடு, கூடுதல் நிதி செலவாவதையும் கட்டுப்படுத்தும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த செயல்முறை நமது கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும் என்றும், இது சிறந்த வாக்காளர் எண்ணிக்கை மற்றும் ஜனநாயக பங்கேற்புக்கு வழிவகுக்கும் என்றும் எடப்பாட் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியின் கீழ் ஒரே நாடு ஒரே தேர்தல் குழு அமைக்கப்படும் என நம்புவதாகவும் அவர் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.