×

ஜெயலலிதாவுக்கு கட்டிய நினைவிடத்தை பார்த்து திமுகவுக்கு பொறாமை- தம்பிதுரை

 

கருணாநிதிக்கு நினை அமைக்க திமுகவினர் கேட்பதாக பிரதமர் மோடி என்னிடம் சொல்லி, ஈ.பி.எஸ் அவர்களுடன் பேசச் சொன்னார். நினைவேந்தலுக்கு எல்லா கட்சியினரையும் அழைத்தவர்கள், இன்று ராஜ்நாத் சிங்கை அழைத்து வந்து, ராகுல் காந்தியை அவமரியாதை செய்துள்ளனர் என அதிமுக எம்பி தம்பிதுரை குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை, “2026ல் அதிமுகவை தோற்கடிக்க பல கட்சி கூட்டணிகளை அமைப்பார்கள். ஆனால் அத்தனையையும் முறியடித்து, வெற்றிப்பெறும் வல்லமை எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு உண்டு. 2026ல் அதிமுக ஆட்சி அமைக்கும். அம்மாவுக்கு கட்டிய நினைவிடத்தை பார்த்து திமுகவுக்கு பொறாமை உண்டு. திமுகவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று பேசிய பாஜக தலைவர்கள், கருணாநிதியின் சமாதியில் கைக்கூப்பி வணங்கி நின்றார்கள். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேவை எனில், பாஜக உடன் தொடர்பு வைத்துக்கொள்ளலாம். பட்ஜெட் குறித்து பேசும்போது கூட நான் பாஜகவை பாராட்டவில்லை


தந்தை பெரியாருக்கு பட்டித் தொட்டியெங்கும் நூற்றாண்டு விழாவை எம்.ஜி.ஆர் கொண்டாடினார். பேரறிஞர் அண்ணாவுக்கு அப்படி நூற்றாண்டு விழாவை கருணாநிதி கொண்டாடினாரா? பேரறிஞர் அண்ணா திமுகவை ஆரம்பித்த போது, கருணாநிதி திமுகவிலேயே இல்லை, சினிமாவில் தான் இருந்தார். புரட்சித் தலைவி அம்மாவுக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்படவில்லை என்பது தவறான செய்தி. நானும், ஈ.பி.எஸ் அவர்களும் புரட்சித் தலைவரின் நூற்றாண்டு விழாவுக்கு வருமாறு பல மத்திய அமைச்சர்களை அணுகினோம். அன்று அரசு நிகழ்வுக்கு உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கியது திமுக.

கருணாநிதிக்கு நினை அமைக்க திமுகவினர் கேட்பதாக பிரதமர் மோடி என்னிடம் சொல்லி, ஈ.பி.எஸ் அவர்களுடன் பேசச் சொன்னார். நினைவேந்தலுக்கு எல்லா கட்சியினரையும் அழைத்தவர்கள், இன்று ராஜ்நாத் சிங்கை அழைத்து வந்து, ராகுல் காந்தியை அவமரியாதை செய்துள்ளனர். காங்கிரஸுடன் கூட்டணி என்கிறார்கள். ஆனால் அதே மேடையில் அவசரநிலை காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர் ராஜ்நாத் சிங் என்கிறார்கள். அவசர நிலையை கொண்டுவந்தவர் ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி. அதனால் தான் ராகுல் காந்தியை அழைக்கவில்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.