×

”இப்படியே இருந்துவிட்டால் எதிர்கட்சியாகவே இருக்க வேண்டியதுதான்”- தங்கமணி

 

இப்படியே இருந்துவிட்டால் எதிர்கட்சியாகவே இருக்க வேண்டியதுதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடந்த அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “கருத்து வேறுபாடுகளால்தான் வெற்றி வாயப்பை இழந்தோம். கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு கட்சி பணியாற்ற வேண்டும். கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணையாவிட்டால் தொடர்ந்து எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டியதுதான். இப்படியே இருந்தால் 2026 சட்டமன்ற தேர்தலிலும் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டியது தான். ஒருவருக்கு வாய்ப்பு கிடைப்பதை மற்றவர் ஏற்க மறுக்கும் நிலை உள்ளது. நமக்குள் ஒற்றுமை இல்லை, இனியாவது ஒற்றுமையாக செயல்பட வேண்டும். 

திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதியில் யாரை நிறுத்தினாலும் எதிர்ப்பு காட்டுகிறீர்கள். நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், கட்சி என வந்து விட்டால் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” எனக் கூறினார்.