அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நாளை ஆலோசனை!!
Jan 24, 2024, 13:52 IST
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையினை தயார் செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் கூட்டம் நாளை(25.01.24) காலை 11 மணிக்கு சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் கொண்ட குழுவினர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.