×

கார் பந்தயத்துக்கு எதிராக அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..! 

 

சென்னையில் கார் பந்தயம் வரும் 31ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென சென்னையில் நடைபெற உள்ள கார்பந்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதுமுக வழக்கு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சென்னையில் கார் பந்தயம் கடந்த ஆண்டு டிச. 9, 10 தேதிகளில் கார் பந்தயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த போட்டி மீண்டும் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், ராணுவம் மற்றும் கடற்படையிடம் இருந்தும் தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 31ஆம் தேதி, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.