×

நடிகர் அஜித்குமாரை பாராட்டிய அதிமுக...ஏன் தெரியுமா?

 

நடிகர் அஜித்குமார் SDAT இலச்சினையை தனது போட்டிகளில் பயன்படுத்துவது மகிழ்வுக்குரியது என அதிமுக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் விளையாட்டு போட்டிகளுக்கான உலகத்தர கட்டுமானத்தை நிறுவவும், நம் மாநிலத்தின் விளையாட்டு வீரர்கள் உலக அரங்கில் மின்ன அவர்களுக்கான பயிற்சி அளிக்கும் உயரிய நோக்கில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்ட அமைப்பு #SDAT மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில், மாண்புமிகு புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி  அவர்களால் விளையாட்டு வீரர்களுக்கான 3% இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. 

#SDAT மூலம் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஒவ்வொரு விளையாட்டிற்கும் தனியாக விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் விடுதி, ஊட்டச்சத்து நிறைந்த உணவு ஆகியவையுடன் கூடிய விளையாட்டு போட்டிகளுக்கான தரமான பயிற்சி வழங்க வழிவகை செய்த இயக்கம் அஇஅதிமுக. கழக ஆட்சியின் செயல்பாடுகள் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு ஊரகப் பகுதிகளிலிருந்து பார் மெச்சும் விளையாட்டு வீரர்கள் உருவாகியுள்ளனர்.தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், பார்முலா கார் பந்தய விளையாட்டு வீரருமான திரு. #அஜித்குமார் அவர்கள் #SDAT இலச்சினையை தனது போட்டிகளில் பயன்படுத்துவது மகிழ்வுக்குரியது. விளையாட்டு வீரர்களை எப்போதும் ஊக்குவிக்கும் இயக்கம் அதிமுக என தெரிவிக்கப்பட்டுள்ளது.