விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பது அதிமுகவின் விருப்பம்: அமைச்சர் உதயநிதி!
Sep 11, 2024, 06:30 IST
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட அரசு வளர்ச்சித் திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அதிகாரிகளும் குறிப்பிட்ட காலத்துக்குள் படிப்படியாக முடிப்பதாக கூறியுள்ளனர். ஆய்வுக் கூட்டம் குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். மதுரையை விட சிவகங்கை மாவட்டத்தில் அதிகாரிகள் செயல்பாடு சிறப்பாக இருந்தது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பது அதிமுகவின் விருப்பம். அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.