"தேர்தல் வருவதால் எய்ம்ஸ் பணி தொடக்கம்" - அமைச்சர் மா.சு. குற்றச்சாட்டு
தேர்தல் வருவதால் எய்ம்ஸ் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சைதை - வெங்கடாபுரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 1.50 கோடி மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தேர்தல் வருவதால் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது.
மத்திய அரசின் எந்தத் திட்டத்திற்கு திமுக முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது என குறிப்பிட்டு சொல்ல வேண்டும்; எடுத்தோம், கவிழ்த்தோம் என பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் பேசுவது சரியல்ல; அச்சம் ஏற்பட்ட காரணத்தினால்தான் ஒரே வாரத்தில் 2 முறை தமிழ்நாடு வந்து செல்கிறார் பிரதமர் என்றார். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணி| தொடங்கியுள்ள நிலையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.