துபாய் ரேஸில் அசத்திய அஜித் ரேஸிங் அணி
Updated: Jan 12, 2025, 17:32 IST

துபாய் 24H சீரிஸ் கார் ரேஸில் 911 GT3R என்ற பிரிவில் நடிகர் அஜித் குமார் ரேஸிங் அணி (901) மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ஒரு அணி சர்வதேச போட்டியில் மூன்றாவது இடத்தை பிடிப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதுவும் அஜித் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே இவ்வளவு பெரிய சாதனையை அந்த அணி செய்துள்ளது