×

நா.த.க.வில் இருந்து சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் விலகல்!

 

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் நாம் தமிழர் கட்சியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். 

இந்நிலையில் அழகாபுரம் தங்கம் தனது முகநூல் பக்கத்தில், “நாம் தமிழர் கட்சியின் "மாநகர மாவட்ட செயலாளர்" என்ற பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்! இதுநாள் வரையில் என்னோடு உடனிருந்து ஒத்துழைப்பு கொடுத்த தோழமைகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவரின் வழியில், தமிழ்தேசிய பாதையில் என்றும் என் பயணம் தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.