×

#OPS இராமநாதபுரத்தில்அனைத்து பன்னீர் செல்வங்களின் மனுக்களும் ஏற்பு!

 
இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சையாக தனி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து அதே பெயரைக் கொண்ட ஐந்து வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
இன்று நடந்த வேட்பு மனு பரிசீலணையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் 5 பன்னீர் செல்வங்களின் மனுக்களும் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.