தமிழ்நாட்டில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை
Aug 9, 2024, 20:47 IST
தமிழ்நாட்டில் நாளை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
2024-2025 ஆம் கல்வியாண்டு நாட்காட்டியில் ஆகஸ்ட் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆகஸ்ட்டில் 2-வடு மற்றும் 4-வது சனிக்கிழமை பள்ளி வேலை நாள் ரத்து செய்யப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அதன்படி, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் அனைத்திற்கும் இந்த அறிவிப்பு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்துவரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.