×

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அனைத்துப் பள்ளிகளும் வழக்கம் போல இயங்கும்

 

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அனைத்துப் பள்ளிகளும் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் பாதை ஆந்திரா பக்கம் திரும்பியதால் சென்னைக்கு மழைக்கு குறைந்தது. இதனால்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட 'ரெட் அலர்ட்'  விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அனைத்துப் பள்ளிகளும் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மழை நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகள் மட்டும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கட்டடங்களை முறையாக ஆய்வு செய்த பிறகே வகுப்புகளை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் மரங்கள் முறிந்து விழுந்திருந்தாலோ, மழைநீர் தேங்கி இருந்தாலோ உடனடியாக அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.