×

“இடி இடிச்சு ஒட்டு மொத்த டிவியும் போயிடுச்சி”- கிராமமே அழுகும் சோகம்

 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி கீழத்தெருவில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ், மின்விசிறி, பல்புகள், மிக்ஸி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் இடி தாக்கியதில் முற்றிலும் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் பழுதாகியது. 

வடகிழக்கு பருவ மழை இரண்டாம் கட்ட சுற்று துவங்கி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் காலை 10.30 மணி மதல் 12.30 மணி வரை பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை வெளுத்து வாங்கியது. எரவாஞ்சேரி ஊராட்சி கீழத் தெரு பகுதியில் இடி தாக்கியதில் பல வீடுகளிலும் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மின்விசிறிகள், பல்பு, ஸ்விச் போர்ட் உள்ளிட்ட ஏராளமான மின் சாதன பொருட்கள் முற்றிலும் சேதமடைந்து பழுதாகியது. 


இடி தாக்கிய போது சில வீடுகளில் மின்சாதன பொருட்கள் சுவிச் ஆகியவை வெடித்து சிதறியது. மேலும் பல வீடுகளில் இடி தாக்கியதில் வீடுகள் அதிர்வு ஏற்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர். இந்நிலையில் தங்கள் வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் முற்றிலும் சேதமடைந்த பழுதாகியதால் செய்வதறியாமல் தவிப்பதாக கூறினர். மினசாரத்துறையினர் ஆய்வு செய்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதமடைந்து பழுதாகியதாக சேதமடைந்த மின்சாதன பொருட்களை  காண்பித்து வேதனையடைந்தனர்.