×

இத்தனை நாட்கள் தெர்மகோல் ஆராய்ச்சி! செல்லூர் ராஜூவுக்கு பாஜக கண்டனம்

 

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர் அமர்பிரசாத் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜகவினர் , அதிமுகவில் இணைவது குறித்து  அண்ணாமலையின் கருத்துக்கு பதில் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை இல்லை, அதிமுக, திமுக,  பாஜக என ஜனநாயக நாட்டில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு இணைவது  இணைவது சகஜம்தான். அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்தபோது  இனித்தது. தற்போது  பாஜகவில் அதிமுகவில் இணையும்போது மட்டும் கசக்கிறதா?   பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை,  வாய் அடக்கம் வேண்டும்.  வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது. மத்தியில் ஆளுகின்றோம் என்கிற திமிரோடு நடந்துகொள்ளக் கூடாது.  கூட்டணி கட்சியை என்கிற பெயரில் தோலில் உட்கார்ந்து கொண்டு காதை கடிப்பதை அண்ணா திமுக என்றும் பொருத்து கொண்டு இருக்காது.

எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரிக்கின்ற அளவுக்கு, பஜகவினர்  தரம் தாழ்ந்து போய்விட்டனர்.  ஒரு காலத்தில் பாரதிய ஜனதா என்றால் மதிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இன்றைக்கு பாஜகவில் தகுதியற்றவர்கள்,  விஷக்கிருமிகள் இருக்கிறார்கள் என்பது தான் இதிலிருந்து தெரிகிறது. இவர்களை எல்லாம் அடக்கி வைக்க வேண்டிய அண்ணாமலையை வாய்க்கொழுப்பாக பேசுகிறார்” எனக் கூறினார். 


இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலையில் ஆதரவாளர் அமர்பிரசாத் ரெட்டி, “இத்தனை நாட்கள் தெர்மகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமிரில் பேசக் கூடாது என பா.ஜ.,வுக்கு ஆலோசனை சொல்லுகிறார். அவர் தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது. வாய்க்கொழுப்பின்றி பேசுவது; திமிரின்றி நடந்து கொள்வது என்பது குறித்தெல்லாம் வகுப்பெடுக்க மதுரையில் விரைவில் கல்லூரி துவங்கப் போறாராம் செல்லூர் ராஜு. நெருங்கிய நட்பில் இருக்கும் யாராவது அங்க ஒரு ’சீட்’ வாங்கிக் கொடுங்கப்பா! அ.தி.மு.க., தொண்டர்கள் கோபப்பட்டால், பா.ஜ. க, தாங்காதுன்னு ஜெயக்குமார் அண்ணன் சொல்லியிருக்காங்க. இந்தக் கோபம் ஈரோடு தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்ட தி.மு.க., மேல வரலையே அண்ணா!” என கிண்டல் அடித்துள்ளார்.