×

அமரன்- 11 நாட்களில் ரூ.242 கோடி சாதனை

 

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் 11 நாட்களில் ரூபாய் 242 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் மறைந்த மேஜர் முகுந்து வரதராஜனின் வாழ்க்கையை தழுவி அமரன் திரைப்படம் உருவாகியுள்ளது. ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்க, வழக்கமான தனது உடல் மொழியை மாற்றி ராணுவ வீரராகவே பல்வேறு கட்ட பயிற்சிகளை எடுத்து முகுந்து வரதராஜன் ஆக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். முதல்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி இதில் நடித்துள்ளார். இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு கடந்த 31- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் அமரன் திரைப்படம் வெளியான பத்து நாட்களில் உலகளவில் ரூ.242 கோடிக்கு மேலும், தமிழ்நாட்டில் ரூ.100 கோடிக்கு மேலும் வசூல் செய்துள்ளது. இது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து 200 கோடிக்கு மேல் வசூலித்த முதல் திரைப்படம் இதுவாகும்.