×

தமிழகம் வருகிறார் அமித்ஷா..!

 

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய தலைவர்களும் தமிழகத்துக்கு வந்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் முதல் வாரத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 4 ஆம் தேதி தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.