×

அமித்ஷா தமிழகம் வருகை மீண்டும் ரத்து!!

 

தமிழ்நாட்டில் அமித்ஷா மேற்கொள்ள இருந்த பிரசார நிகழ்வுகள் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.  இதன் காரணமாக அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.  பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரதமர் மோடி தமிழகத்தில் ஏற்கனவே பிரச்சாரம் செய்துள்ள நிலையில் , வருகிற வாரமும் பிரச்சாரம் மேற்கொள்ள உறுதி உள்ளார். 

இந்த சூழலில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை பிரச்சாரத்திற்காக தென்காசிக்கு வருகை புரிவதாக இருந்தது.  சிவகங்கை தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு மதியம் ஹெலிகாப்டரில் தென்காசி வருவார் என்றும் அங்குள்ள இளஞ்சியில் ராமசாமி பிள்ளை பள்ளி வளாகத்திற்கு வருகை புரியும் அவர் தென்காசி மத்தளம் பாறை விலக்கு பகுதி ஆன ஆசாத் நகர் பகுதியில் ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அமித்ஷா வருகை ஒட்டி தென்காசியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் மேற்கொள்ள இருந்த பிரச்சார நிகழ்வுகள் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.  இன்று இரவு மதுரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை ,தென்காசி ,குமரி தொகுதிகளில் ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க அமித்ஷா திட்டமிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.