×

ரூ.2000 நிவாரணம் - இன்று முதல் டோக்கன்

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று முதல் முதல்வர் அறிவித்த குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ. 2000 வழங்கப்படும், மற்ற இடங்களில் டோக்கன் வழங்கப்பட்டு ஓரிரு நாட்களில் வழங்கப்படும் என  தமிழ்நாடு வருவாய்த்துறை செயலர் அமுதா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமுதா மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. இராதாகிருஷ்ணன் ஆகியோர் விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பல்நோக்க உள் விளையாட்டு அரங்கத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் பணியை நேரில் ஆய்வு செய்து பணியை துரிதப்படுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம்வருவாய்த்துறை செயலர் அமுதா, ஃபெஞ்சல் புயல் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று முதல்வர் அறிவித்த ரூ 2000 நிவாரணம் நியாவிலைக்கடை மூலம் வழங்கப்படும். மற்ற இடங்களில் இன்று முதல் டோக்கன் வழங்கப்பட்டு படிப்படியாக இரண்டு மூன்று தினங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக இந்த நிவாரணத் தொகையானது வழங்கப்படும் என தெரிவித்தார்.

*மேலும் மிகவும் பாதிக்கப்பட்ட  பகுதிகளுக்கு விக்கிரவாண்டி பகுதிகளுக்கு செங்கல்பட்டில் இருந்தும், இருவேல்பட்டு அரசூர்  உள்ளிட்ட பகுதிகளுக்கு திருச்சியில் இருந்தும், அரகண்டநல்லூர், கண்டாச்சிபுரம் பகுதிகளுக்கு திருவண்ணாமலையிலிருந்தும் உணவு தயார் செய்யப்பட்டு உணவு, பால் தண்ணீர் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை  3 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கியுள்ளதாகவும் மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் 105 மையங்களில் உணவு  தயார் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்ட பகுதியும் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது அதுவும் நிறைவு பெற்று அதற்கான நிவாரணம் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.