×

கிளாம்பாக்கத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் - அமைச்சர் சேகர்பாபு

 

கிளாம்பாக்கத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என்று  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மாதம் பயன்பாட்டிற்கு வந்தது. இந்தநிலையில் இன்று முதல் செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் வழியாக செல்லக்கூடிய அனைத்து தென் மாவட்ட பேருந்துகளும், கிளாம்பாக்கம் பகுதியில் இருந்து இயங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு 20 சதவீத பேருந்துகள், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்த போது, கிளாம்பாக்கத்தில் விரைவில் மலிவு விலை உணவகம்' கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும். கோயம்பேட்டில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கு கிளாம்பாக்கத்தில் கடை ஒதுக்க ஏற்பாடு; முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் பணி ஏப்ரலில் நிறைவு பெறும் என்றார்.