×

கார் பந்தய பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆணையர் உயிரிழப்பு

 

கார் பந்தய பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆணையர் நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.

சென்னை தீவுத்திடலில் திட்டமிட்டபடி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 2:45 மணிக்கு தொடங்க இருந்த கார் பந்தயம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்னும் தொடங்கவில்லை. மேலும் சர்வதேச மோட்டார் அமைப்பு ஆய்வை முடிக்கவில்லை. பந்தய சாலையில் ஆய்வுப் பணியை இன்னும் முடிக்காததால் பயிற்சிப் போட்டி தொடங்கவில்லை. இதனிடையே  ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கான FIA சான்றிதழை இரவு 8 மணிக்குள் பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் கார் பந்தய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமார் என்பவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்  உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சிவக்குமாரின் உயிர் பிரிந்தது.