சென்னையில் மின்சாரப் பெட்டி வெடித்து பயங்கர விபத்து
Aug 11, 2024, 11:50 IST
சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் வீட்டில் மின்சாரப் பெட்டி வெடித்து, 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தது.
சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் தனியார் மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் பழனியப்பன் என்பவர் வீட்டில் மின்சாரப் பெட்டி வெடித்து விபத்து ஏற்பட்டது. நேற்று இரவு மின்தடை ஏற்பட்டதால் மின் ஊழியர்கள் சரி செய்து விட்டு சென்ற நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. கேபிளில் பிரச்சினை இருப்பதாக கூறிச் சென்ற நிலையில், இன்று அதிகாலை 2 மணி அளவில் மின்சார பெட்டி வெடித்தது. மின்சார பெட்டி அருகே இருந்த கார்கள், வீட்டின் முன்பகுதியில் இருந்த பொருட்கள் சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து நீலாங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.