×

கோவையில் பெய்த ஒரு மணிநேர மழைக்கே சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்

 

கோவையில் பெய்த கனமழையால் ரயில் நிலையம் சாலையில் தேங்கிய மழைநீர் 15 நிமிடங்களில் முழுமையாக வடிந்ததால் இயல்பு நிலைக்கு திரும்பியது. 

கோவை மாநகரில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாலை 6.00 மணி அளவில் கோவை டவுன்ஹால், உக்கடம்,  ரயில் நிலையம்,  காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் திருச்சி சாலை, அவிநாசி சாலை மற்றும் ரயில் நிலையம் உள்ள ஸ்டேட் பேங்க் சாலையிலும் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ரயில் நிலையத்தில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் மற்றும் ரயில் பயணிகள் அவதி அடைந்தனர்.  

இந்நிலையில் மழை நின்று 15 நிமிடங்களுக்குள் மழை நீர் அனைத்து பகுதிகளிலும் முழுமையாக வடிந்ததால் மீண்டும் சாலைகள் இயல்பு நிலைக்கு திரும்பியது.  இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் ரயில் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.