×

வரிப்பகிர்வில் தமிழகத்திற்கான பங்கை பாதியாக குறைத்திருப்பது பெரும் அநீதி - அன்புமணி

 

வரிப்பகிர்வில் தமிழகத்திற்கான பங்கை பாதியாக குறைத்திருப்பது பெரும் அநீதி என பாமக தலைவர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக 16-ஆம் நிதி ஆணையத் தலைவருக்கு அன்புமணி இராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்திற்கான  பங்கு கடந்த ஒன்பதாம் நிதி ஆணையத்தின் காலத்தில்  7.931%  இருந்ததாவும்,  இப்போது அது  4.09 %, அதாவது  பாதியாக குறைக்கப்பட்டிருப்பது அநீதி என்றும்  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான வரிப் பகிர்வுக் கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.