×

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு?- தமிழக அரசு விளக்கம்

 

பழனி பஞ்சாமிர்தம் செய்ய ஆவினில் இருந்தே நெய் கொள்முதல் செய்யப்படுகிறது என தமிழ்நாடு உண்மை சர்பார்ப்புக்குழு விளக்கம் அளித்துள்ளது.

திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்ட நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பை கலந்து விற்ற ராஜசேகர்தான் (AR Foods ) பழனி முருகன் கோவிலுக்கும் நெய் சப்ளை செய்கிறார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இப்படிபட்ட ஒரு நல்லவரைதான் பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமித்துள்ளது திமுக அரசு என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதுமட்டுமின்றி கடந்த 2022ம் ஆண்டு திமுக நியமித்த புதிய அறங்காவலர் பொறுப்பேற்ற பிறகுதான் பழனி பஞ்சாமிர்தத்தின் தரம் கெட்டு போயுள்ளது, பல முறை குற்றச்சாட்டுகள் வந்த பிறகும், அறங்காவலர் குழு மழுப்பலாக பதில் சொல்லி வருவது யாரை காப்பாற்ற ? பழனி பஞ்சாமிர்தம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சப்ளை செய்யபடும் நெய்யை பரிசோதனை செய்தால் உண்மை தெரியவரும் என பாஜகவினர் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். 

இதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு உண்மை சர்பார்ப்புக்குழு, “பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக பரவிய செய்தி வதந்தி; பழனி பஞ்சாமிர்தத்தில் ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.திருப்பதி லட்டு சர்ச்சையில் சிக்கிய ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திடம் இருந்து நெய் பெறவில்லை” என  விளக்கம் அளித்துள்ளது