'தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதே பாஜகவின் உச்சபட்ச வளர்ச்சி'- அண்ணாமலை
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவதே பாஜகவின் உச்சபட்ச வளர்ச்சி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவதே பாஜகவின் உச்சபட்ச வளர்ச்சி. வெற்றியை முத்தமிடும் அளவுக்கு பாஜக மக்களை நெருங்கிவிட்டது. தீவிரமாக பணியாற்ற வேண்டும். யார் எதிராக வேலை செய்தாலும் பாஜக வளர்ச்சியை அணை போட்டு தடுக்க முடியாது. எங்கள் தலைமையில் மாமன் - மச்சான் கூட்டணி வேற்றுமையில் ஒற்றுமையாகும். நடிகர் விஜயும் மாமன் - மச்சான் தான். அவர் மாமன் - மச்சான் கூட்டணிக்கு வந்தால் ஏற்போம், பாஜக இல்லை என்றால் அதிமுகவால் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூடப் பெற முடியாது. வரும் 2026ல் திராவிட கட்சிகள் இல்லாத அரசு தமிழகத்தில் அமையும்.
இந்திய அளவிலும், உலக அளவிலும் முக்கியமான நகரங்களில் ஒன்றான, நமது சென்னை மாநகரம் உருவான தினம் இன்று. பல சாதனையாளர்களை உருவாக்கிய மண் நமது சென்னை. உழைப்பவர்களுக்கு நிச்சயம் உயர்வைக் கொடுத்து, வந்தோரை எல்லாம் வாழவைக்கும் உயரிய நகரம். கடந்த 1639 -ம் ஆண்டு தொடங்கி, கடந்த 385 ஆண்டுகளில், பல வரலாறுகளைச் சுமந்து பயணித்துக் கொண்டிருக்கிறது நமது தலைநகரம்” என்றார்.