144 தடை உத்தரவு அமல்...அமைச்சர் மூர்த்தியின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியது எப்படி? - அண்ணாமலை கேள்வி
Feb 4, 2025, 08:22 IST

மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்த திமுக அரசு, அமைச்சர் மூர்த்தி ஊர்வலத்திற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கியது? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் திமுகவினரை, சட்ட நடவடிக்கைகளிலிருந்து காப்பாற்றி வருவது போல, அமைச்சர் மூர்த்தியையும், சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டுச் செயல்பட அனுமதிக்கிறதா திமுக அரசு? திமுகவினர் கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டங்களுக்கு அனுமதி வழங்காமல் பாரபட்சமாகச் செயல்படும் திமுகவை, மாண்புமிகு உயர்நீதிமன்றமே கண்டித்திருக்கிறது.