×

தமிழகத்தில் காட்டு தர்பார்- அண்ணாமலை கொந்தளிப்பு

 

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில்  பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணியை மதன் என்பவர் வகுப்பறைக்குள்  நுழைந்து சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பேரழிவை சந்தித்துள்ளது. சட்டம் ஒழுங்கு இல்லாத காட்டு
தர்பார் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரி செய்யாமல் திசை திருப்பும் நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபடுகிறது. தஞ்சை பள்ளி ஆசிரியை கொலை மற்றும் ஒசூரில் பட்டப்பகலில் வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது சட்டம், ஒழுங்கு நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.