×

இனியாவது பழங்குடியின மக்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்கி கொடுக்க வேண்டும் - அண்ணாமலை

 

இனியாவது பழங்குடி சமூக மக்களுக்கான வசதிகளையும் வாய்ப்புக்களையும் உருவாக்கிக் கொடுக்க முன்வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி. ஶ்ரீபதி அவர்கள், தமிழகத்தின் முதல் பழங்குடியின நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நமது நாட்டின் குடியரசுத் தலைவர் பதவியை, பழங்குடியினத்தைச் சேர்ந்த திருமதி திரௌபதி முர்மு அவர்கள் அலங்கரிக்கும் இதே காலகட்டத்தில், தனது கடின உழைப்பால், 23 வயதிலேயே நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ள திருமதி ஶ்ரீபதி அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.