"தன்னலமற்ற திராவிட இனத் தலைவர் பேரறிஞர் அண்ணா" - ஓபிஎஸ் புகழாரம்!!
Feb 3, 2024, 12:05 IST
பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளான இன்று அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சமூகவலைத்தள பக்கத்தில், குழந்தைக்குத் தேவையான உணவைத் தாய் அளிப்பதுபோல, மாணவனுக்குத் தேவையான கல்வியை ஆசிரியர் அளிப்பதுபோல, இல்லாதவர்களுக்குத் தேவையானதை இருப்பவர்கள் அளிக்க முன்வர வேண்டும் என்ற அன்புத் தத்துவத்தைச் சொல்லி அதன்படி வாழ்ந்துகாட்டிய பெருமைக்குரிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளான இன்று அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.