ஆகஸ்ட் 31ல் நியாயவிலைக் கடைகள் இயங்கும் என அறிவிப்பு
Aug 28, 2024, 19:14 IST
ஆகஸ்ட் 31ம் தேதி அனைத்து நியாய விலைக்கடைகளும் இயங்கும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
வரும் 31 ஆம் தேதி அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாத பொருட்களைப் பெறாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மாதத்தின் கடைசி பணி நாளில் எவ்வித பொருட்களும் விநியோகிக்கப்படாது.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி பணி நாளில் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் மேற்கொள்ளப்படாமல் இருக்கும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக இந்த மாதம் கடைசி தேதியில் (31-08-2024) அனைத்து நியாய விலை கடைகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.